/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகைக்கடைகள் இன்று 6:30 மணிக்கு திறப்பு
/
நகைக்கடைகள் இன்று 6:30 மணிக்கு திறப்பு
ADDED : ஏப் 30, 2025 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, ; அக்ஷய திரிதியை தினத்தில் தங்கம் வாங்கினால், இல்லத்தில் செல்வம் செழிக்கும் என்பது ஐதீகமாகும். அதனால் சாதாரண நடுத்தர குடும்பத்தினர் கூட, தங்களின் வசதிக்கு ஏற்ப, அக்ஷய திரிதியை தினத்தில், தங்கம் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
நகைக்கடைகளில் இன்று வாடிக்கையாளர்கள் கூட்டம், அதிகம் இருக்கும் என, நகைக்கடை வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். அதனால், அனைத்து நகைக்கடைகளும் காலை, 6:30 முதல் திறந்திருக்கும் என, கோவை தங்கநகை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.