நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்: சூலுார் அடுத்த அருகம்பாளையத்தை சேர்ந்தவர் அன்னபூரணி, 38. ஓட்டல் உரிமையாளர். சம்பவத்தன்று ஓட்டல் முன் நின்றிருந்த போது, பைக்கில் வந்த இரு நபர்கள் அருகில் வந்தனர். அதில் ஒரு நபர் இறங்கி வந்து முகவரி கேட்பது போல், பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
அப்போது, திடீரென அப்பெண் அணிந்திருந்த இரண்டு சவரன் செயினை பறித்துக்கொண்டு பைக்கில் ஏறி தப்பினார். இதுகுறித்து சூலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

