/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜிமிக்கி கம்மல், வளையல், லிப்ஸ்டிக்...! பேன்சி கடைகளில் அள்ளுது லேடீஸ் கூட்டம்

ADDED : அக் 26, 2024 11:23 PM

தீபாவளி புது டிரெஸ்சுக்கு மேட்ச்சாக ஜிமிக்கி, கம்மல், வளையல்கள் வாங்க வந்த பெண்கள் கூட்டத்தால் கடைவீதி கலகலத்தது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன. கோவை பெரியகடைவீதி, ஒப்பணக்காரவீதி, காந்திபுரம் கிராஸ்கட் உள்ளிட்ட பகுதியில், தீபாவளி பர்ச்சேஸ் செய்ய வரும் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
மாலை நேரத்தில் மழை வரும் என்பதால், காலை 10:00 மணிக்கே பெரியகடைவீதியில் நேற்று கூட்டம் அதிகரிக்க துவங்கி விட்டது. ஜவுளிக்கடைகளில் இருந்து வெளியே வருபவர்கள், அடுத்ததாக செல்லும் கடை பேன்சி பொருட்கள் கடைகளுக்குதான்.
பெரியகடை வீதியில் உள்ள பேன்சி ஸ்டோர்ஸ் மற்றும் பிளாட்பாரக் கடைகளில், பெண்கள் புது டிரெஸ்சுக்கு மேட்ச்சாக ஜிமிக்கி, கம்மல், வளையல், ஜடை பேண்ட், ஹேர்பின், டாலர், செயின் மற்றும் ஆபரணங்கள், அழகு சாதனப் பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
பேன்சி பொருட்கள் வியாபாரி ஆறுமுகம் கூறுகையில், ''ஆடைகளுக்கு மேட்ச்சாக வளையல், கம்மல் உள்ளிட்ட பொருட்களை பெண்கள் விரும்பி வாங்கி அணிகின்றனர். அதனால் இந்த தீபாவளிக்கு ஏராளமான டிசைன்களில், பிளாஸ்டிக் மற்றும் கோல்டு கவரிங் பொருட்கள், மும்பை, கோல்கட்டா மற்றும் ராஜஸ்தானில் இருந்து விற்பனைக்கு வந்துள்ளன,'' என்றார்.