/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தரம் உயர்த்திய பள்ளிகளில் பணியிடம் உருவாக்கணும்
/
தரம் உயர்த்திய பள்ளிகளில் பணியிடம் உருவாக்கணும்
ADDED : ஆக 20, 2025 10:05 PM
கோவை; கோவை மாநகராட்சி சார்பில், 17 மேல்நிலைப்பள்ளிகள் நடத்தப்படுகின்றன. உயர்நிலையில் இருந்து மேல்நிலையாக மேம்படுத்திய பல பள்ளிகளில், குறிப்பிட்ட பாடங்களுக்கு ஆசிரியர் பணியிடங்கள் இதுவரை உருவாக்கப் படவில்லை.
ஆர்.எஸ்.புரம் மேற்கு, ஒக்கிலியர் காலனி, ராமகிருஷ்ணாபுரம், செல்வ புரத்தில் செயல்படும் பள்ளிகள் உட்பட பல பள்ளிகளில் வணிகவியல், கணக்குப் பதிவியல் பாடங்களுக்கு ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப் படவில்லை.
பொருளியல் பாடத்துக்கு ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்காததால், சில பள்ளிகளில் காமர்ஸ் குரூப் மூடப்பட்டது. தற்போது, மாநகராட்சி கல்வி நிதியில் பள்ளி மேலாண்மை குழு வழியாக, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு, தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
மாணவர்களின் நலனை கருதி, தேவையான ஆசிரியர் பணியிடங்களை, நிரந்தர ஆசிரியர்களால் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

