/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனநல மீளாய்வு மன்றங்களில் வேலை; தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்
/
மனநல மீளாய்வு மன்றங்களில் வேலை; தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்
மனநல மீளாய்வு மன்றங்களில் வேலை; தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்
மனநல மீளாய்வு மன்றங்களில் வேலை; தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 11, 2025 09:46 PM
கோவை; தமிழ்நாடு மாநில மனநல ஆணையம் மற்றும் மனநல மீளாய்வு மன்றங்களுக்கு டாக்டர்கள், உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், மாநில மனநல சேவைகளை ஒழுங்குபடுத்தவும், ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கும் அமைப்பு. இந்த அமைப்பின் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு, தகுதியான நபர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இதன்படி, 12 மனநல மீளாய்வு மன்றங்களுக்கான தலைவர், 11 மனநல மருத்துவர், 11 பொதுமருத்துவர் 26 உறுப்பினர்கள், நியமனம் செய்யப்படவுள்ளனர். கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களில், காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
இதற்கான விண்ணப்ப படிவத்தை, https://tnhealth.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஜூலை, 9ம் தேதி மாலை 5:00 மணிக்குள் ' முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளச்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010' என்ற முகவரியில் தபால் அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.