/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நான் முதல்வன்' திட்டத்தின்கீழ் வேலை வாய்ப்பு முகாம் துவக்கம்
/
'நான் முதல்வன்' திட்டத்தின்கீழ் வேலை வாய்ப்பு முகாம் துவக்கம்
'நான் முதல்வன்' திட்டத்தின்கீழ் வேலை வாய்ப்பு முகாம் துவக்கம்
'நான் முதல்வன்' திட்டத்தின்கீழ் வேலை வாய்ப்பு முகாம் துவக்கம்
ADDED : மே 22, 2025 11:58 PM
கோவை : 'நான் முதல்வன்' திட்டத்தின்கீழ் நேற்று துவங்கிய வேலை வாய்ப்பு முகாமில் கல்லுாரி மாணவர்கள் அதிகமானோர் ஆர்வமுடன் பங்கேற்றுவருகின்றனர்.
இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை மற்றும் சென்னை என்.எஸ்.இ., அகாடமி சார்பில் 'நான் முதல்வன்' திட்டத்தின்கீழ் வேலை வாய்ப்பு முகாம் நேற்று துவங்கியது; இன்று நிறைவடைகிறது. வர்த்தக சபை அரங்கில் நடக்கும் இம்முகாமில் வங்கிகள், ஐ.டி., நிறுவனங்கள், வர்த்தகம், உற்பத்தி நிறுவனங்கள் என, 69 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் ராஜேஷ் லுந்து முகாமை துவக்கிவைத்தார். நேற்று காலை, 9:00 முதல் மதியம், 12:00 மணி நிலவரப்படி, 450க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று நேர்காணல் வரை சென்றுள்ளனர்.
ஒவ்வொருவரும் தலா மூன்று நிறுவனங்களிடம் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இன்றும் தொடர்ந்து முகாம் நடக்கும் நிலையில், 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், கடந்த, 2023ம் ஆண்டு நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு முகாமில், 50 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, 100 மாணவ, மாணவியரை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.