/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்னணி நிறுவனங்களில் மாணவர்களுக்கு வேலை
/
முன்னணி நிறுவனங்களில் மாணவர்களுக்கு வேலை
ADDED : மே 10, 2025 12:35 AM

கோவை: மலுமிச்சம்பட்டி, ஸ்ரீ நேரு மகா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வேலைவாய்ப்பு ஆணை வழங்கும் விழா நடந்தது.
சிறப்பு விருந்தினராக, மாவட்ட வேலைவாய்ப்புத்துறை இயக்குனர் கருணாகரன் பங்கேற்று, பல்வேறு துறைகளில் தொழில் வளர்ச்சிகள் மற்றும் பரந்த அளவிலான தொழில் வாய்ப்புகள் குறித்த, மதிப்புமிக்க நுண்ணறிவுகளை, மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் 545 பேருக்கு, வேலை வாய்ப்பு ஆணைக்கான கடிதங்கள் வழங்கப்பட்டது.
எச்சன்சர், அவன்டார் வி.டபுள்யு.ஆர்., ஜெப் வேர்ல்டு வைட், டி.சி.எஸ்., என முன்னணி நிறுவனங்களிடமிருந்து, மாணவர்கள் வேலைவாய்ப்புகளை பெற்றனர்.
எஸ்.என்.எம்.வி., கலை கல்லுாரியின் முதல்வர் சுப்ரமணி, கல்லுாரியின் வேலைவாய்ப்பு அதிகாரி தினேஷ், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.