/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காலகாலேஸ்வரர் கோவிலில் இணை ஆணையர் ஆய்வு
/
காலகாலேஸ்வரர் கோவிலில் இணை ஆணையர் ஆய்வு
ADDED : ஜூலை 25, 2025 09:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்பாளையம்; கோவில்பாளையத்தில், 1,200 ஆண்டுகள் பழமையான காலகாலேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் கடந்த டிசம்பரில் திருப்பணிகள் துவங்கின. வசந்த மண்டபம், அன்னதான கூடம், மடப்பள்ளி, ராஜகோபுரம் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன. நேற்று இந்து சமய அறநிலையத்துறை கோவை இணை ஆணையர் ரமேஷ் திருப்பணிகளை ஆய்வு செய்தார். திருப்பணியை வேகப்படுத்தும்படி அறிவுறுத்தினார். ஆய்வில் அறங்காவலர் குழு தலைவர் சிரவை நாகராஜ், செயல் அலுவலர் தேவி பிரியா, அறங்காவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.