/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விதை பரிசோதனை மையத்தில் இணை இயக்குனர் ஆய்வு
/
விதை பரிசோதனை மையத்தில் இணை இயக்குனர் ஆய்வு
ADDED : ஜன 25, 2025 11:00 PM

கோவை: பன்னாட்டு விதை பரிசோதனை குழுமத்தின், அங்கீகாரம் பெற்று இயங்கும் கோவை விதை பரிசோதனை மையத்தை, விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
கோவையில் பன்னாட்டு விதை பரிசோதனை குழுமத்தின், அங்கீகாரம் பெற்று இயங்கும் விதைப்பரிசோதனை நிலையம் உள்ளது.
இந்த பரிசோதனை மையத்தில், சென்னை விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு இணை இயக்குனர் தபேந்திரன், ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு விதை மாதிரிகள் மற்றும் பணி விதை மாதிரிகளின் இலக்கு, சாதனை விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வு முடிவுகள் குறித்த காலத்தில் விதை உற்பத்தியாளர், விதை விற்பனையாளர் மற்றும் விவசாயிகளுக்கு சென்றடைகின்றதா என்பதை கேட்டறிந்தார். ஆண்டு இலக்கை முழுமையாக முடிக்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, விதை பரிசோதனை அலுவலர் நர்கீஸ், வேளாண் அலுவலர்கள் வசந்தி, ஜெயசித்ரா, தனஞ்செயன் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் பங்கேற்றனர்.
கோவை விதை பரிசோதனை மையத்தை, விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு இணை இயக்குனர் தபேந்திரன் ஆய்வு செய்தார்.

