/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலைப்பாதையை அலங்கரிக்கும் கார்த்திகை பூக்களால் மகிழ்ச்சி
/
மலைப்பாதையை அலங்கரிக்கும் கார்த்திகை பூக்களால் மகிழ்ச்சி
மலைப்பாதையை அலங்கரிக்கும் கார்த்திகை பூக்களால் மகிழ்ச்சி
மலைப்பாதையை அலங்கரிக்கும் கார்த்திகை பூக்களால் மகிழ்ச்சி
ADDED : டிச 11, 2025 05:07 AM

வால்பாறை: வால்பாறையில், மலைப்பாதையை அலங்கரிக்கும் கார்த்திகை பூக்களை சுற்றுலா பயணியர் கண்டு வியந்தனர்.
வால்பாறை மலைப்பகுதியில் பருவமழைக்கு பின், பல்வேறு வகையான பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. கடந்த மாதம் ரொட்டிக்கடை, பாரளை, அட்டகட்டி, காடம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் நிற சூரியகாந்திப்பூக்கள் பரவலாக பூத்துக்குலுங்கின.
தற்போது, கார்த்திகை மாதம் துவங்கியுள்ள நிலையில் பொள்ளாச்சி செல்லும் மலைப்பாதையில், வெள்ளி நிற கார்த்திகைப்பூக்கள் பரவலாக பூத்துக்குலுங்குகின்றன.
மலைப்பாதையில் இயற்கை காட்சிகளிடையே தற்போது பரவலாக காணப்படும் கார்த்திகைப்பூக்களை சுற்றுலா பயணிர் ஆர்வத்துடன் கண்டு ரசித்து, செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.