/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்டணை கைதிகளுடன் நீதிபதி உரையாடல்
/
தண்டணை கைதிகளுடன் நீதிபதி உரையாடல்
ADDED : மே 01, 2025 11:36 PM

பொள்ளாச்சி; கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி ரமேஷ், பொள்ளாச்சி துணை சிறையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தண்டனை கைதிகளிடம் கலந்துரையாடினார்.
அப்போது, கைதிகளுக்கு தேவையான வசதிகள் உரிய முறையில் வழங்கப்படுகிறதா, தண்டனை கைதிகள், தங்கள் இல்லத்தினருடன் தொடர்பு கொள்ள தேவையான வசதிகள் செய்யப்படுகிறதா, சமையல் கூடத்தை பார்வையிட்டு, கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் சிறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும், கைதிகளுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட உதவிகள் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து, சட்டப்பணி ஆணைக்குழு வக்கீல் வருகைப்பதிவேடு குறித்த ஆவணம் மற்றும் இதர தொடர்பு உடைய ஆவணங்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.
துணை சிறை கண்காணிப்பாளர் மாரிமுத்து, பொள்ளாச்சி வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வக்கீல் வினுராஜ், சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் உடனிருந்தனர்.

