ஜூனியர் அதலெடிக்ஸ் போட்டி அவினாசிலிங்கம் ‘சாம்பியன்’
ஜூனியர் அதலெடிக்ஸ் போட்டி அவினாசிலிங்கம் ‘சாம்பியன்’
UPDATED : நவ 14, 2026 03:12 PM
ADDED : நவ 14, 2026 03:12 PM

அ நிறம் | அளவு
கோவை: ஸ்போர்ட்ஸ் லேண்ட் சார்பில் பள்ளி மாண, மாணவியருக்கான 4வது ‘ஜூனியர் அதலெடிக்ஸ் சாம்பியன்ஷிப்’ போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது.
அமைச்சர் சம்பத்குமார் போட்டிகளை துவக்கி வைத்தார். 8 வயது முதல் 18 வயது வரையிலான மாணவ, மாணவியர் 1700 பேர் பங்கேற்றனர். 50, 75, 100 மீட்டர் ஓட்டம், 4*100 தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தினர்.
ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை அவினாசிலிங்கம் மெட்ரிக் மகளிர் மேல்நிலைப்பள்ளி தட்டி சென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு ஸ்போர்ட்ஸ் லேண்ட் நிர்வாக இயக்குனர் ஜெயந்தி வில்சன், இயக்குனர்கள் நவீன் ஜான், சஞ்சய் பரிசுகள் வழங்கினர்.
