தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பயத்த காட்டிட்டாங்க பங்கு...

பயத்த காட்டிட்டாங்க பங்கு...

பயத்த காட்டிட்டாங்க பங்கு...


UPDATED : நவ 14, 2026 03:07 PM

ADDED : நவ 14, 2026 03:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 03:07 PM ADDED : நவ 14, 2026 03:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: இருட்டில் படபடக்கும் அந்த ஐந்து நிமிட பயணம்...சிட்டிக்குள் இருக்கும் ஒரு இடம்...கரடுமுரடான பாதை, பெரும் அமைதி, கும் இருட்டு, சாக்கடை நாற்றம் என மனதிற்குள் பயத்தை உண்டாக்குகிறது இந்த பாதை...

இது வேறு எங்கும் இல்லை. நஞ்சுண்டாபுரம் மற்றும் வெள்ளலூர் மகாலிங்கபுரத்தை இணைக்கும் நொய்யல் ஆற்றோர மண் பாதை.

வேலைக்கு செல்வோர், வியாபாரிகள், குழந்தைகள், பெண்கள், வயதானோர் என பலரும் இந்த பாதையை பயன்படுத்துகின்றனர். இவ்வழியாக போனால் நஞ்சுண்டபுரத்தை 5 முதல் 10 நிமிடத்தில் எட்டி விடலாம். இதை விட்டால் 5 கிலோ மீட்டர் வரை போத்தனூர் சுற்றி வரவேண்டும்.

பகல் நேரத்தில் கடக்கும் போதே கரடுமுரடான பாதையால் சிரமப்படும் மக்கள், இரவில் பேயாவது வழிகாட்டாதா என்று ஏங்குகின்றனர். இருட்டோடு சாக்கடை நாற்றமும் பீதியை கூட்டுகிறது. இரவில் சைக்கிளில் வரும் அடித்தட்டு மக்கள் கீழே விழுந்து அடிபடாமல் செல்ல முடிந்தால் பாராட்டு விழா நடத்தலாம்.

இப்படிப்பட்ட சாலையில் பெண்கள் செல்லும் போது ஏற்படும் உணர்வுகளை தனியாக சொல்லி விளக்க அவசியம் இல்லை.

இந்த பகுதியில் பிழைப்பு நடத்தும் ஒரு கடைக்காரர் கூறினார்: ”ஏற்கனவே எனக்கு முதுகு வலி. இந்த வழிய விட்டா பொருள் வாங்க அஞ்சு கிலோ மீட்டர் சுத்தி போகணும். அதுவும் போத்தனூர் கடைவீதி வழியா வரணும். அங்க காலைல எப்பவுமே டிராபிக் பயங்கரமா இருக்கும். அதனால முதுகு வலிய பார்காம இந்த வழிய பயன்படுத்துறேன். எத்தனையோ அரசாங்கம் வருது, போகுது, இந்த மண் ரோடு மட்டும் மாறவே இல்லைங்க. போதாக்குறைக்கு இந்த ஏரியால வசிக்கிற படிச்சவங்க, பொறுப்பானவங்க மெனக்கிட்டு அவங்க குப்பைய இங்க வந்து கொட்டிட்டு போறாங்க. எதாவது அசம்பாவிதம் நடந்தா ஒரு தடயமும் கிடைக்காது. சிசிடிவி கேமரா கூட நஞ்சுண்டாபுரம் ரோடு ஜாயின் பண்ற இடத்துலதான் வச்சிருக்காங்க..”

என்ன சொல்லி தேற்றுவது என்று நமக்கு புரியவில்லை. “தேர்தல் வரும் பொறுத்திருங்க. சீர்படுத்துவோம்னு வாக்குறுதி கொடுக்க வரிசைகட்டி வருவாங்க..” என்றோம்.

கடைக்காரர் மென்மையாக புன்னகைத்தார். அவரும் எத்தனை தேர்தலை பார்த்திருப்பார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us