/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடியரசு தின விழாவை நினைத்தாலே சிலிர்ப்புதான்!
/
குடியரசு தின விழாவை நினைத்தாலே சிலிர்ப்புதான்!
ADDED : ஏப் 12, 2025 11:32 PM

இன்று நினைத்தாலும் மிகவும் சிலிர்ப்பாக இருக்கிறது என்று, அந்த நாளை மீண்டும் நினைத்துப் பார்க்கிறார், ஹரிகாந்த்.
கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரியில், 3ம் ஆண்டு இயந்திரவியல் துறை படித்து வருகிறார் இவர். கடந்தாண்டு, டில்லி குடியரசு தின அணிவகுப்பில், கலை சார் மாணவர் பிரிவில் பங்கேற்றவர்களில் இவரும் ஒருவர்.
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க, ஆறு மாதங்களாக நடத்தப்படும் 12 முகாம்களில் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்த வேண்டும்.
அதிகாலை 4:00 மணிக்கு துவங்கும் பயிற்சி, இரவு 10:00 மணி வரை நடக்கும். இதில், உடற்பயிற்சி, டிரில், துப்பாக்கி சுடுதல், தன்னம்பிக்கை பாடம், யோகா, பேரிடர் காலங்களில் எப்படி மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவது போன்ற பல்வேறு பயிற்சிகள் இதில் பிரதானம்.
மாணவர் ஹரிகாந்த் கூறுகையில், ''குடியரசு தின அணிவகுப்புக்கு, தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, முகாம் வாயிலாக கடின பயிற்சிகள் வழங்கப்படும். என்.சி.சி., ராணுவத்தின் இரண்டாவது படையாக கருதப்படுகிறது.
அணிவகுப்பில் பங்கேற்பதற்கு முன், வழங்கப்படும் 12 முகாம்களின் பயிற்சியில் சிறப்பாக செயல்பட வேண்டும். பல தடைகளை கடந்து தான், அந்த இடத்துக்கு வர முடியும். குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றது, ஏதோ சாதித்து விட்ட திருப்தியை ஏற்படுத்துகிறது,'' என்கிறார் சிலிர்ப்புடன்.

