/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளம் வயது மாரடைப்பு; 'பல்ஸ் ஹார்ட்டத்தான்'
/
இளம் வயது மாரடைப்பு; 'பல்ஸ் ஹார்ட்டத்தான்'
ADDED : செப் 23, 2024 12:11 AM

கோவை : ரோட்டரி மாவட்டம், 3201 சார்பில் நேற்று நடந்த 'பல்ஸ் ஹார்ட்டத்தான்' ஓட்டத்தில், திரளானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
ரோட்டரி மாவட்டம், 3201 மற்றும் கோவையில் உள்ள, 18 ரோட்டரி சங்கங்கள் சார்பில், 30-40 வயதுடையவர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு, 'பல்ஸ் ஹார்ட்டத்தான்' ஓட்டம், ராம் நகரில் நேற்று நடந்தது.
ரோட்டரி மாவட்ட கவர்னர் சுந்தரவடிவேலு தொடங்கி வைத்த இந்த ஓட்டம், 5 கி.மீ., துாரம் சென்று வ.உ.சி., மைதானத்தில் முடிவடைந்தது. போலீஸ் துணை கமிஷனர்(தெற்கு) சரவணகுமார் முன்னிலையில் நடந்த ஓட்டத்தில், திரளானோர் பங்கேற்றனர்.
ரோட்டரி கிளப் இளைஞர்கள் பிரிவு மாவட்டத் தலைவர் காட்வின் மரியா விசுவாசம் கூறுகையில், ''இளம் வயதில் மாரடைப்பு உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முதலில் நடந்து செல்வது, மெதுவாக ஓடுவது, வேகமாக ஓடுவது, பின்னர் மெதுவாக ஓடுவது, நடப்பது என, ஐந்து விதமாக ஓட்டம் நடந்தது,'' என்றார்.
விழிப்புணர்வு ஓட்டத்தையொட்டி, ஓவியப் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், எஸ்.பி.டி., மருத்துவமனை சேர்மன் சுசீலா உட்பட பலர் பங்கேற்றனர்.