/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கபடி வீரர் உயிரிழப்பு; போலீசார் விசாரணை
/
கபடி வீரர் உயிரிழப்பு; போலீசார் விசாரணை
ADDED : ஜன 12, 2025 11:33 PM

போத்தனூர்; கோவை, குனியமுத்தூர் அடுத்து கோவைபுதூரில், மாவட்ட அளவிலான கபடி போட்டி நடத்த அப்பகுதியை சேர்ந்தோர் திட்டமிட்டிருந்தனர்.
இதில் பங்கேற்க, சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஒரு அணியினர் காலையில் அங்கு வந்தனர். போட்டி மாலையில் துவங்கும் என, ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து, அக்குழுவின் சீரநாயக்கன்பாளையம், திலகர் வீதியை சேர்ந்த மணிகண்டன்.23 உள்ளிட்டோர், ஆர்.டி.ஓ.. சாலையிலுள்ள ஒரு ரவுண்டானாவில் அமர்ந்து, மொபைல்போன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மதியம், 12:30 மணியளவில் மணிகண்டன் திடீரென சரிந்து விழுந்தார். உடனிருந்தோர் அவரை, சுண்டக்காமுத்தூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு தூக்கிச் சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். குனியமுத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
உயிரிழந்த கபடி வீரர் மணிகண்டன், தனது கண்களை தானம் செய்திருந்தார். இதையடுத்து, அரசு மருத்துவமனையில் அவரது கருவிழிகள் அகற்றப்பட்டன. பிரேத பரிசோதனைக்குப் பின், உறவினர்களிடம் அவரது சடலம் ஒப்படைக்கப்பட்டது.