/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'காதம்பரி - 2025' இசை நிகழ்ச்சி துவக்கம்
/
'காதம்பரி - 2025' இசை நிகழ்ச்சி துவக்கம்
ADDED : ஜன 03, 2025 11:42 PM

கோவை; பி.எஸ்.ஜி., அண்ட் சன்ஸ் அறக்கட்டளை சார்பில் துவங்கிய, 'காதம்பரி-2025' இசை நிகழ்ச்சி, பார்வையாளர்களின் மனதை கவர்ந்து வருகிறது.
பி.எஸ்.ஜி., அண்ட் சன்ஸ் அறக்கட்டளை மற்றும் பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியின் இசைத் துறை சார்பில், 'காதம்பரி-2025' எனும் இசை நிகழ்ச்சி, பி.எஸ்.ஜி., மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. நாளை நிறைவடைகிறது.
பி.எஸ்.ஜி., அண்ட் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் துவக்கிவைத்தார். பி.எஸ்.ஜி., கல்வி நிறுவன மாணவர்களின், 'ராக பிரவாகம்' எனும் இசை கச்சேரி, பார்வையாளர்களின் மனம் கவர்ந்தது. இதில், இசை மற்றும் நாட்டியத்தில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியருக்கு, 'கலைச்சுடர் விருது' வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர், ஜி.கே.என்.எம்., மருத்துவமனை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்திரசேகர் பேசுகையில்,''இதுபோன்ற நிகழ்ச்சிகள், இளைஞர்களிடம் இசை சார்ந்த ஆர்வத்தை ஊக்குவிக்கும்; அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், பி.எஸ்.ஜி., சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவ இயக்குனர் புவனேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.