தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கதிர் பொறியியல் கல்லுாரி மாணவர் சங்க துவக்கவிழா

கதிர் பொறியியல் கல்லுாரி மாணவர் சங்க துவக்கவிழா

கதிர் பொறியியல் கல்லுாரி மாணவர் சங்க துவக்கவிழா


ADDED : அக் 09, 2024 12:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 09, 2024 12:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை : கதிர் பொறியியல் கல்லுாரியின் ஒரு அங்கமான கதிர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் ( கே.எஸ்.எம்.,) அதன் மாணவர் சங்கம் 2024--25ம் ஆண்டுக்கான துவக்கவிழா, நீலாம்பூரில் உள்ள, கதிர் பொறியியல் கல்லுாரி அரங்கில் நடந்தது.

ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிர்வாகம் மற்றும் பயிற்சியின் மூத்த பொது மேலாளர் சம்பத்குமார் நிகழ்வுகளை துவக்கிவைத்தார்.

ஒழுக்கம், நேர்மை, நல்ல குணநலன்களை மேம்படுத்திக்கொள்வதன் அவசியம் குறித்தும், தனித்திறனை கண்டறிந்து அதை மேம்படுத்தி முன்னேற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கே.எஸ்.எம்., மாணவர் சங்க நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து, நேர்மையாகவும், பொறுப்புடனும் செயல்படுவோம் என்று, உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். நிகழ்வில், கே.எஸ்.எம்., இயக்குனர் குணசேகரன், சக நிர்வாகிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us