/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க.,வுக்கு எதிராக 'களம்': கள் இயக்கம் எச்சரிக்கை
/
தி.மு.க.,வுக்கு எதிராக 'களம்': கள் இயக்கம் எச்சரிக்கை
தி.மு.க.,வுக்கு எதிராக 'களம்': கள் இயக்கம் எச்சரிக்கை
தி.மு.க.,வுக்கு எதிராக 'களம்': கள் இயக்கம் எச்சரிக்கை
ADDED : பிப் 01, 2024 05:56 AM
திருப்பூர்: ''கள்ளுக்கான தடையை நீக்காவிட்டால், தமிழகத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும், வேட்பாளர்கள் களமிறக்கப்படுவர்'' என, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.
திருப்பூரில், தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நேற்று கூறியதாவது:அனைத்து பாசன பகுதிகளுக்கும் ஒருபோக பாசன நீர் வழங்கிய பின்பே, இரண்டாம் போக தண்ணீர் திறக்கவேண்டும் என்பது காவிரி தீர்ப்பு. இந்த தீர்ப்பை தமிழக அரசு மதிப்பதே இல்லை.
பருவமழை குறைந்ததால், காவிரி டெல்டா மாவட்டங்களில், 5 லட்சம் ஏக்கருக்கு மட்டுமே குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது; 13 லட்சம் ஏக்கருக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
அருகாமையில் உள்ள புதுச்சேரி, கேரளா, தெலுங்கானா மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும்கூட கள்ளுக்கு தடை விதிக்கப்படவில்லை. கள்ளில் கலப்படத்தை கட்டுப்படுத்த முடியாது என்றால், தமிழக அரசுக்கு ஆளுமை இல்லை என்பதுதானே உண்மை!
தமிழக அரசு கள்ளை உணவாக அறிவிக்கவேண்டும். லோக்சபா தேர்தல் தேதி அறிப்பு வெளியாகும்முன், தமிழகத்தில் கள்ளுக்கான தடை நீக்கப்படவேண்டும். தவறினால், தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளிலும், தி.மு.க.,வுக்கு எதிராக, கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர்.
இவ்வாறு, அவர் கூறினார்.