/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.பி.ஆர்., கல்லுரியில் காளையர் திருவிழா
/
கே.பி.ஆர்., கல்லுரியில் காளையர் திருவிழா
ADDED : டிச 30, 2024 12:13 AM

சூலுார்; கே.பி.ஆர், கலைக்கல்லுாரி வளாகத்தில், காளையர் திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி மற்றும் தலைமை ரேக்ளா சங்கம் சார்பில், ஐந்தாம் ஆண்டு, காளையர் திருவிழா -2024, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. தமிழர் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் நடத்தப்பட்ட இவ்விழா கோ பூஜையுடன் துவங்கியது.
கே.பி.ஆர்., குழும தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் அனந்த கிருஷ்ணன், கல்வி குழும செயலர் காயத்திரி அனந்தகிருஷ்ணன் ஆகியோர் போட்டியினை துவக்கி வைத்தனர்.
200மீ., 300மீ., என இரு பிரிவாக ரேக்ளா பந்தயங்கள் நடந்தன. 300க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இலக்கை நோக்கி மாட்டு வண்டிகள் சீறி பாய்ந்தன. இரு பிரிவுகளில் முதல் இடம் பெற்றவர்களுக்கு, பைக்கும், இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு, ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்பட்டன.
மூன்று மற்றும் நான்காம் பரிசாக தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன.
கலைக்கல்லுாரி முதல்வர் கீதா, இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் சரவணன், பெண் பணியாளர்கள் கல்வி பிரிவின் முதல்வர் சரவண பாண்டி, துணைத்தலைவர் சேமசுந்தரம் மற்றும் பேராசியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.