/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காலகாலேஸ்வரர் கோவில் திருப்பணி துவக்கம்
/
காலகாலேஸ்வரர் கோவில் திருப்பணி துவக்கம்
ADDED : டிச 07, 2024 05:49 AM
கோவில்பாளையம்; காலகாலேஸ்வரர் கோவிலில், திருப்பணி பூமி பூஜையுடன் துவங்கியது.
கோவில்பாளையம் கால காலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருப்பணி பூமி பூஜையுடன் நேற்று முன்தினம் துவங்கியது.
முதல் கட்டமாக, 60 அடிக்கு 33 அடி அளவுள்ள முழுமையான கல் மண்டபம், ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் உபயதாரர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
இதையடுத்து ராஜகோபுரம், தளம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பல கோடி ரூபாய் செலவில் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பூமி பூஜையை முன்னிட்டு காலகாலேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடும் வேள்வி பூஜையும் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் நாகராஜ், செயல் அலுவலர் அருண் பிரகாஷ், அறங்காவலர்கள் ரவீந்திரன், ரவிச்சந்திரன், சுமதி, சிவசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.