/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காமாட்சி அம்மன் கோவில் திருவிழா
/
காமாட்சி அம்மன் கோவில் திருவிழா
ADDED : ஜன 28, 2025 07:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனைமலை :  ஆனைமலை காமாட்சி அம்மன் கோவிலில், கடந்த 13ம் தேதி, கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. 25ம் தேதி, கும்பஸ்தாபனம் நடந்தது. 26ம் தேதி, அம்மன் திருக்கல்யாண வைபவம், மாவிளக்கு பூஜை நடந்தது.
நேற்று, திரு ஊஞ்சல் உற்சவம், பூவோடு வழிபாடு நடந்தது. இன்று, 28ம் தேதி, காலை 8:00 மணிக்கு, கொடி இறக்கும் நிகழ்வு மற்றும் மகா அபிஷேகம் நடக்கிறது. காலை, 10:30 மணிக்கு, சுவாமிக்கு விசேஷ அலங்காரம், பூஜைகள், தீபாராதனை நடக்கிறது. மாலை, மஞ்சள் நீராடல், அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

