/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாதனை மாணவி படிப்புக்கு நிதியுதவி கமல் அறிவிப்பு
/
சாதனை மாணவி படிப்புக்கு நிதியுதவி கமல் அறிவிப்பு
ADDED : மே 18, 2025 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், அரியலுார் மாவட்டம், சூழவடையான் கிராமத்தில் உள்ள கோகிலாம்பாள் பள்ளி மாணவி சோபியா, 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.
'அரசு பஸ் கண்டக்டரான, தன் தந்தையின் கஷ்டத்தை போக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படித்தேன்' என, மாணவி கூறியிருந்தார்.
மாணவியை, வீடியோ காலில் பாராட்டிய மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல், 'நீங்கள் செய்திருப்பது பெரிய சாதனை.
'உங்கள் மேற்படிப்புக்கான உதவிகளை செய்யத் தயாராக இருக்கிறேன். நன்றாக படிப்பவர்களை கண்டால் எனக்கு பிடிக்கும். பணத்தை பற்றி கவலைப்படாதீர்கள்' என்றார்.