/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காமராஜர் ரோட்டுக்கு விமோசனம்; திருச்சி ரோட்டுக்கு எப்போது வரும்
/
காமராஜர் ரோட்டுக்கு விமோசனம்; திருச்சி ரோட்டுக்கு எப்போது வரும்
காமராஜர் ரோட்டுக்கு விமோசனம்; திருச்சி ரோட்டுக்கு எப்போது வரும்
காமராஜர் ரோட்டுக்கு விமோசனம்; திருச்சி ரோட்டுக்கு எப்போது வரும்
ADDED : செப் 30, 2025 10:58 PM

கோவை; கோவையில், 24 மணி நேர குடிநீர் திட்டத்துக்காகவும், பாதாள சாக்கடை பணிக்காகவும் பல்வேறு இடங்களில் ரோடு தோண்டப்பட்டது.
போக்குவரத்து மிக்க, திருச்சி ரோடு, சிங்காநல்லுார் - காமராஜர் ரோடுகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டன.
திருச்சி ரோட்டையும், அவிநாசி ரோட்டையும் இணைக்கும் சிங்காநல்லுார் - காமராஜர் ரோட்டில் 3 கி.மீ., இரு புறமும் குழாய் பதிக்கப்பட்டு, ரோடு குண்டும், குழியுமாக இருந்தது. குழாய் பதித்த இடங்களில் புதிதாக தார் தளம் அமைக்காததால், பல மாதங்களாக வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
அதேபோல், திருச்சி ரோடு, சிங்காநல்லுாரில் இருந்து ஒண்டிப்புதுார் வரை, 4 கி.மீ., துாரத்துக்கும் குழாய் பதிக்கப்பட்டு, ரோடு மோசமான நிலையில் காணப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகமும் குழாய் பதிக்கும் பணிகளை முடித்து, நெடுஞ்சாலைத்துறையினடரிடமும் ரோட்டைஒப்படைத்து விட்டது.
இருந்தும், சிங்காநல்லுார் - காமராஜர் ரோட்டை புதுப்பிக்காததால் பல மாதங்களாக,பெரும் சிரமங்களுடன், விபத்து பயத்தில் வாகன ஓட்டிகள் பயணித்து வந்தனர். அவர்களுக்கு நிம்மதி தரும் விதமாக, தோண்டப்பட்ட இடங்களில் தற்போது ரோடு போடப்பட்டு வருகிறது.
வாகன ஓட்டிகள் கூறுகையில், 'நீண்ட தாமதத்துக்கு பின், காமராஜர் ரோடு தற்போது புதுப்பிக்கப்படுவது, விபத்து அச்சத்தை நீக்கியுள்ளது. சிங்காநல்லுாரில் இருந்து ஒண்டிப்புதுார் செல்லும் ரோட்டில், கரும்புக்கடை பஸ் ஸ்டாப், வசந்தா மில் பஸ் ஸ்டாப் அருகே, சாந்தி சோசியல் சர்வீஸ் பெட்ரோல் பங்க் முன்பு, என முக்கிய இடங்களில் ரோடு மோசமாக உள்ளது. குழாய் பதித்த அவ்விடங்களையும் நெடுஞ்சாலைத்துறையினர், தாமதமின்றி புதுப்பிக்க வேண்டும்' என்றனர்.