/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காங்கிரஸ் அலுவலகத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா
/
காங்கிரஸ் அலுவலகத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா
ADDED : ஜூலை 15, 2025 08:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில், காமராஜரின், 123வது பிறந்தநாள் விழா காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமை வகித்தார். வீனஸ்மணி, தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். காமராஜர் உருவ படத்துக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.
பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் காந்தகுமார், குருசாமி, வசந்த், ராம் நகர் சீனிவாசன், செல்லப்பா, சச்சின் சிவகுமார், பட்டம்மாள், ஜேம்ஸ் குமார், சக்திவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.