/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்; மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
/
பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்; மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்; மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்; மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
ADDED : ஜூலை 15, 2025 09:33 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில், மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் பிரகாஷ் வரவேற்றார். பள்ளி தாளாளர் மாரிமுத்து, காமராஜரின் சாதனைகள் குறித்து விளக்கினார். பள்ளி செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
மாணவர்களிடையே கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
* பொள்ளாச்சி அருகே நெகமம் சின்னேரிபாளையம் சுவஸ்திக் மெட்ரிக் பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி தாளாளர் தீபா காந்தி தலைமை வகித்தார். பள்ளி ஆசிரியர் மஞ்சுளா, கமாராஜரின் திருவுருவம் வரைந்து மாணவர்களிடம் அவரின் தியாக வாழ்வு குறித்து விளக்கினார். மாணவர்களுக்கு பேச்சு, ஓவியம், கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
* பொள்ளாச்சி சவுடேஸ்வரி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி தாளாளர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். மேலும், பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
* பொள்ளாச்சி லதாங்கி வித்யா மந்திர் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடந்த விழாவில், இளநிலை வகுப்பு மாணவர்கள், காமராஜரின் உருவப்படத்துக்கு வண்ணம் தீட்டி காட்சிப்படுத்தினர்.
காமராஜரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. மாணவர்கள், பரதநாட்டியம், கவிதை, நடனம், சிலம்பம், இசைக்கருவி இசைத்தல் வாயிலாக காமராஜரின் வரலாற்றை விளக்கினர். மாணவர்கள், உருவப்படத்தில் கையொப்பமிட்டனர்.
பள்ளியின் செயலர் ரமேஷ் ராஜ்குமார், தாளாளர் சாந்திதேவி, பள்ளி நிர்வாக இயக்குனர் ரிதன்யா, பள்ளி முதல்வர் ரேவதி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
* பக்கோதிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமையாசிரியர் ஜேக்கப்பால் மாணிக்கராஜ் வரவேற்றார். மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.
* சேத்துமடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், கல்வியின் முக்கியத்துவம், காமராஜர் கல்விக்காக செய்த தொண்டுகள் குறித்து விளக்கப்பட்டது. ஆசிரியர், மாசிலாமணி பேசினார்.
* பொள்ளாச்சி நேதாஜி ரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சிவப்பிரியா வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் ஜெய்லாபுதீன், துணை தலைவர் காளிமுத்து, பள்ளி வளர்ச்சிக்குழு உறுப்பினர் நடராஜ் முன்னிலை வகித்தனர்.
காமராஜரின் உருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.
வால்பாறை
வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், காமராஜர் படத்திற்கு, பள்ளி தலைமை ஆசிரியிர் சிவன்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
* வால்பாறை நகர் நகராட்சி துவக்கபள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கலைசெல்வி தலைமை வகித்தார். விழாவில் காமராஜர் படத்திற்கு பள்ளி மாணவர்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
* முடீஸ் மத்திய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கணேஷ் தலைமை வகித்தார். விழாவில் பள்ளிக்கல்விக்குழு செயலாளர் ஜான்சன் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்த பின், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
* நல்லகாத்து ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ரஞ்சித்குமார், காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து, அவரது வாழ்க்கை வரலாறு குறித்து மாணவர்கள் மத்தியில் பேசினார்.
கிணத்துக்கடவு
* கிணத்துக்கடவு, மெட்டுவாவி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மயிலாத்தாள் தலைமை ஏற்றார்.
மேலும், பள்ளி மாணவர்கள் பலர் காமராஜர் போன்று மாறுவேடம் அணிந்து அசத்தினர்.
தொடர்ந்து பேச்சு கட்டுரை ஓவியம் கவிதை வாசித்தல் பாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
* நெகமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமை ஆசிரியர் கோமதி வரவேற்றார். தொடர்ந்து அவரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. மாணவர்ககளுக்கு பேச்சு போட்டி உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது.
* அரசம்பாளையம், அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. இதில், பள்ளி தலைமை ஆசிரியர் வித்யா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
உடுமலை
* உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் உதவி தலைமையாசிரியர் ஜெயராஜ் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஆரிபா, உறுப்பினர் அப்துல் வாஹிப் பங்கேற்றனர். பள்ளி இலக்கிய மன்ற செயலாளர் ராஜேந்திரன் நன்றி தெரிவித்தார்.* ஆ.அம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த கல்வி வளர்ச்சி நாள் விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள் காமராஜரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பள்ளி தலைமையாசிரியர் பால்ராஜ், ஆசிரியர்கள் ரேணுகா, சங்கரேஸ்வரி, மாணவர்களுக்கு பேச்சு, பாட்டு, கவிதைப் போட்டிகள் நடத்தினர்.
* ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தலைமையாசிரியர் தங்கவேல் காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார். மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், பாட்டு போட்டிகள் வைக்கப்பட்டது.
* விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தலைமையாசிரியர் செண்பகவல்லி தலைமை வகித்தார். ஆசிரியர் சுதா வரவேற்றார். முள்ளுப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் தர்மராஜ் முன்னிலை வகித்தார். விழாவையொட்டி மாணவியருக்கு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
* பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் ஜெகநாதஆழ்வார்சாமி வரவேற்றார். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சரவணன், ஆசிரியர் கணேச பாண்டியன் முன்னிலை வகித்தனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், கவியரங்கம் நடந்தது. ஆசிரியர் ராதா நன்றி தெரிவித்தார்.* ஆர்.கே.ஆர். கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி முதல்வர் மாலா காமராஜரின் புகைபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். விழாவில் பங்கேற்ற ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஆர்.கே.ஆர். கல்வி தலைவர் ராமசாமி, செயலாளர் கார்த்திக்குமார் பாராட்டு தெரிவித்தனர்.
* கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தலைமையாசிரியர் சாரதாமணிதேவி தலைமை வகித்தார். தாளாளர் சின்னராஜ் முன்னிலை வகித்தார். கல்வி வளர்ச்சி நாளையொட்டி மாணவர்களுக்கு மாறுவேடப் போட்டி நடந்தது. தொடர்ந்து பேச்சு, கவிதை, நாடகம், உள்ளிட்ட போட்டிகளும் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
* பள்ளபாளையம் ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் பள்ளியின் மூத்த இயக்குனர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். காமராஜர் படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
* குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு நடனம், பேச்சு, போட்டிகள் நடந்தது. சங்கராமநல்லுார் பேரூராட்சி தலைவர் மல்லிகா, துணைத் தலைவர் பிரேமலதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தாமோதரன், முன்னிலை வகித்தனர். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கண்ணீஸ்வரி, முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி ராஜேந்திரன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன், ஆசிரியர்கள் விழாவை ஒருங்கிணைத்தனர்.
* உடுமலை ஆர்.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி முதல்வர் சகுந்தலாமணி வரவேற்றார். மாணவர்கள் காமராஜரின் எளிமை, வாழ்க்கை முறை குறித்து பேசினர். தொடர்ந்து சமூக விழிப்புணர்வு நாடகங்களை நடத்தினர். ஆசிரியர்கள் விழாவை ஒருங்கிணைத்தனர்.
* கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா கல்வி நிறுவனத்தில் நடந்த கல்வி வளர்ச்சி நாள் விழாவில் பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன் காமராஜர் படத்துக்கு மலர் துாவி மரியாதை செய்தார். மழலைப்பிரிவு குழந்தைகள் காமராஜர் வேடமணிந்து பேசினர்.
* குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை, பாட்டு, ஓவியப்போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் மாரியப்பன் பரிசுகளை வழங்கினார்.
* காமராஜர் நற்பணி மன்றம் சார்பில், பெதப்பம்பட்டி நால்ரோட்டில், முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளையொட்டி, உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். மன்ற நிர்வாகிகள், ராமஜெயம், அற்புதராஜ், சிவக்குமார், முத்துக்குமார், ஜெகதீஸ் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

