/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கம்பன் கலை மன்றத்தின் மாதாந்திர சொற்பொழிவு
/
கம்பன் கலை மன்றத்தின் மாதாந்திர சொற்பொழிவு
ADDED : அக் 16, 2025 08:35 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கம்பன் கலை மன்றத்தின் மாதாந்திர நிகழ்வு, லயன்ஸ் கிளப் கட்டடத்தில் நடந்தது. 'மகாத்மா காந்தியும், வள்ளலாரும்' என்ற தலைப்பில் நடந்த நிகழ்வில், கவிஞர் ரமேஷ் வரவேற்றார்.
என்.ஜி.எம்., கல்லுாரி முதன்மையர் முத்துக்குமரன் தலைமை வகித்தார். தேசிய மற்றும் மாநில அளவில் ஆசிரியர் விருது பெற்றவர்களுக்கு, 'கல்விச் சுடர்' விருது வழங்கப்பட்டு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கல்லுாரி பேராசிரியர் லோகமாதேவி, வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு குறித்து விளக்கிப் பேசினார். என்.ஜி.எம்., கல்லுாரி தமிழ் இலக்கியத் துறை தலைவர் ராஜ்குமார், 'வள்ளலார் வாக்கும் காந்தியாரின் வாழ்வும்' என்ற தலைப்பில் பேசினார்.
குறிப்பாக, வள்ளலார் மற்றும் காந்தியின் காலம் வேறுபட்டதாக இருந்தபோதிலும் சிந்தனைகள் ஒன்றாக இருந்தது என தெரிவிக்கப்பட்டது.
பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் இடம்பெற்றது. முடிவில், கவிஞர் செல்லமுத்து நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கம்பன் கலை மன்ற தலைவர் சண்முகம், செயலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.