/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நாளை துவக்கம்
/
கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நாளை துவக்கம்
ADDED : ஏப் 04, 2025 11:36 PM
அன்னுார்; அன்னுார் கரி வரதராஜ பெருமாள் கோவிலில், 20வது ஆண்டு ராம நவமி விழா நாளை (6ம் தேதி) துவங்குகிறது. 6ம் தேதி மாலை 5:00 மணிக்கு ராமர் பிறப்பு ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது. இரவு 7:00 மணிக்கு 'கருமுகில் கொழுந்து துளிர்த்தது' என்கிற தலைப்பில், மகேஸ்வரி சத்குரு பேசுகிறார்.
வரும் 7ம் தேதி காலை 10:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவமும், மதியம் மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. இரவு 7:00 மணிக்கு 'இணைந்தது, யோகமும் போகமும்' என்னும் தலைப்பிலும், 8ம் தேதி இரவு 'சுடுமோ பெருங்காடு' என்னும் தலைப்பிலும், 9ம் தேதி 'வஞ்சி மகள் வந்தாள்' என்னும் தலைப்பிலும், வரும் 10ம் தேதி இரவு 'வானரங்கள் வியந்த வல்லமை' என்னும் தலைப்பிலும் சொற்பொழிவு நடைபெறுகிறது.
நிறைவு சொற்பொழிவு வருகிற 15-ம் தேதி காலை 10:00 மணிக்கு நடைபெறுகிறது. இதையடுத்து மகா தீபாராதனை, சுவாமி உட்பிரகார உலா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை அறங்காவலர்கள் மற்றும் ஸ்ரீ ராமானுஜர் பக்த பேரவையினர் செய்து வருகின்றனர்.
பகவத் கீதை சொற்பொழிவு
அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், இன்று (5ம் தேதி) பகவத் கீதை சொற்பொழிவு நடைபெறுகிறது.
'இஸ்கான்' இயக்கம் சார்பில், அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், இன்று (5ம் தேதி) மாலை 6:00 மணிக்கு பகவத் கீதை சொற்பொழிவு நடைபெறுகிறது.
ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் மாவட்ட நிர்வாகி பேசுகிறார். இதையடுத்து கீதை ஸ்லோகங்கள் வாசிக்கப்படுகிறது. பஜனை நடைபெறுகிறது. சொற்பொழிவில் பங்கேற்று இறையருள் பெற இஸ்கான் நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.