/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கம்பத்து ஆட்டம் அரங்கேற்ற விழா
/
கம்பத்து ஆட்டம் அரங்கேற்ற விழா
ADDED : ஜன 28, 2025 05:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம், : நரசிம்மநாயக்கன்பாளையத்தில் வள்ளி, முருகன் கலைக்குழுவின் கம்பத்து ஆட்டம் அரங்கேற்ற விழா நடந்தது.
நரசிம்மநாயக்கன்பாளையம் ஜோதி காலனி ஸ்ரீ சக்தி ஜோதி மற்றும் ஜலக்கன் மாரியம்மன் கோவில் திடலில் வள்ளி, முருகன் கலைக்குழுவின் ஆசிரியர்கள் பழனிசாமி மற்றும் தயாநிதி ஆகியோரது ஒருங்கிணைப்பில் இவ்விழா நடந்தது.
கொங்கு நாட்டின் பாரம்பரிய கலை வடிவமான கம்பத்து ஆட்டத்தை திரளான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தங்கவேலு, முத்துலட்சுமி, யோகேஷ், சக்தி, சரண்யா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

