ADDED : ஏப் 11, 2025 10:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கனகாபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவிலில், தமிழ் புத்தாண்டு கனகாபிேஷகம் வரும், 14ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு, அதிகாலை, 4:30 மணி முதல் ஏழு வகையான ேஹாமங்கள், 11 வகையான திருமஞ்சன அபிேஷகம் நடக்கிறது.
காலை, 6:00 மணிக்கு கனகாபிேஷகம் (பொற்காசுகளால்) நடக்கிறது. அதன்பின், சாற்றுமுறை நடைபெற்று தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. பக்தர்களுக்கு கனகாபிேஷக காசுகள் வழங்கப்படும். சித்திரைக்கனி வழிபாட்டுக்கு, கனி வகைகள் வழங்க விரும்புவோர், கோவிலில் வழங்கலாம். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

