/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இன்று கந்த சஷ்டி சூரசம்ஹார பெருவிழா

ADDED : அக் 26, 2025 10:22 PM
கோவை: சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இன்று, கந்த சஷ்டி சூரசம்ஹார பெருவிழா, பக்தர்கள் சூழ விமரிசையாக நடக்கிறது.
இன்று காலை 4 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகமும், 7 மணிக்கு மகாதீபாராதனையும், பகல் 12 மணிக்கு வேலாயுதம் புறப்பாடும், ராஜராஜேஸ்வரி கோயிலில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
மாலை 4 மணிக்கு மஹா தீபாராதனை, 5 மணிக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சியும் சூரசம்ஹார நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு சுவாமிக்கு பிராயசித்த அபிஷேகமும், தேவசேனா நிச்சயதாம்பூல வைபவமும் நடக்கிறது.
நாளை மாலை 4:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். 29ம் தேதி காலை 6 மணிக்கு அபிஷேகம், சண்முகார்ச்சனை, சந்தனகாப்பு, இரவு 8 மணிக்கு சுவாமி திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராட்டு வைபவம் நடக்கிறது.
வரும் 30ம் தேதி காலை 5 மணிக்கு அபிஷேகம், 8 மணிக்கு லட்சார்ச்சனையும், மகாதீபாராதனையும் நடக்கிறது. ஆஞ்சநேய சுவாமிக்கு வடமாலை சாத்தும் வைபவத்தோடு, விழா நிறைவடைகிறது.