/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கண்டாங்கி, கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு'
/
'கண்டாங்கி, கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு'
ADDED : அக் 17, 2024 11:45 PM

புடவை கட்டினாலே பெண்களுக்கு தனி அழகு வந்து விடுகிறது. குறிப்பாக நேர்த்தியாக புடவை அணியும் போது, அது அணிபவரை, ஒரே நேரத்தில் அழகாகவும் கம்பீரமாகவும் வெளிப்படுத்துகிறது.
பெண்களின் இந்த புடவை மோகத்துக்கு தீனி போடும் விதமாக கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள எஸ்.பி.பி., சில்க்ஸில் பல்வேறு வகையான புடவைகள் அணிவகுத்திருக்கின்றன.
காஞ்சிபுரம், ஆரணி பட்டு என, பல ரகங்களில் பட்டுப்புடவைகள் இருந்தாலும், டிஸ்யூ புடவைகளுக்கு தனி இடம் உள்ளது.
இந்த ரக புடவைகள் ரூ.2,500 முதல், ரூ.70 ஆயிரம் வரை உள்ளன. டஸ்ஸார் புடவைகளுக்கு எப்போதும் மவுசு இருக்கும். இதுதவிர பென்னி சில்க்ஸ், சிப்பான் சேலைகள், கூட் சில்க்ஸ் என, புடவைகளில் பல்வேறு ரகங்கள் உள்ளன.
பட்டு சேலைகள் ரூ.1,000 முதல் ரூ.1.14 லட்சம் வரை உள்ளன.இது ஒரு புறம் இருக்க பெண்களுக்கான ரெடிமேட் ஆடைகள் இரண்டாவது தளத்தில் குவிந்துள்ளன.
பெண்களுக்கு பாரம்பரிய உடைகள் ஒருபுறம் என்றால், வெஸ்டர்ன் ரெடிமேட் ஆடைகள் இன்னொரு புறம். சுடிதார் மெட்டீரியலை பொறுத்தவரை பாங்கிரி, பக்திகேபதா, கேதரிங், அனார்கலி, ஷாராஸ், பலாசோ என பல ரகங்கள் உள்ளன.ஆண்களுக்கு மூன்றாவது தளத்தில் பார்மல், கேசுவல் சர்ட்டுகள், டிசர்ட்டுகள், ஜீன்ஸ், காட்டன் பேண்ட்கள் இடம் பெற்றுள்ளன.குழந்தைகளுக்கான ஆடைகள் நான்காம் தளத்தில் இடம் பெற்றுள்ளது.இந்த தீபாவளிக்கு குழந்தைகளுக்கான சார்ஜென்ட் ரக ஆடைகள் அதிகளவில் விற்பனையாகின்றன. குறைந்தபட்சம் ரூ.600 முதல், அதிகபட்சம் ரூ.5,000 வரை ஆடைகள் உள்ளன.
தீபாவளிக்கு இரு ரகங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆர்கன்சா மெட்டிரியல், பாப்கார்ன், வெர்ட்டிகன் ஆகியவை அதிகம் விற்பனையாகின்றன. இந்த ரக சுடிதார், சல்வார்கள், சிங்கிள் குர்தீஸ்களை பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். இவற்றின் விலை, குறைந்தபட்சம் ரூ.400 - 500 முதல் அதிகபட்சம் ரூ1,500 வரை உள்ளது.