/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காந்தையாறு பாலம் பணி அடுத்தவாரம் துவங்கும்
/
காந்தையாறு பாலம் பணி அடுத்தவாரம் துவங்கும்
ADDED : அக் 08, 2024 11:52 PM
மேட்டுப்பாளையம் : சிறுமுகை அருகே லிங்காபுரத்திற்கும், காந்தவயலுக்கும் இடையே, காந்தையாற்றின் குறுக்கே, 15.40 கோடி ரூபாய் செலவில், உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இதுவரை மூன்று துாண்கள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இரண்டு துாண்கள் பாதி அளவு கட்டப்பட்டு உள்ளன.
இந்நிலையில், கன மழை பெய்ததால், பவானி சாகர் அணையின் தண்ணீர், காந்தையாறு வரை தேங்கியது. இதனால் பாலம் கட்டும் பணிகள் தடைபட்டன. தற்போது, ஆற்றில் நீர் மட்டம் குறைந்ததை அடுத்து, நிறுத்தப்பட்டுள்ள பாலம் கட்டும் பணிகளை, மீண்டும் துவக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆற்றில் தண்ணீர் குறைந்ததை அடுத்து, மீண்டும் பாலம் கட்டும் பணிகளை துவக்கும்படி, ஒப்பந்ததாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆயுத பூஜை முடிந்தபின், பணிகளை துவங்குவதாக தெரிவித்துள்ளார். ஆயுதபூஜை முடிந்த பின் பணிகள் துவக்கப்படும், என்றனர்.