/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கணியூர், கரவழி மாதப்பூர் இணைந்து பேரூராட்சியாக தரம் உயர்கிறது
/
கணியூர், கரவழி மாதப்பூர் இணைந்து பேரூராட்சியாக தரம் உயர்கிறது
கணியூர், கரவழி மாதப்பூர் இணைந்து பேரூராட்சியாக தரம் உயர்கிறது
கணியூர், கரவழி மாதப்பூர் இணைந்து பேரூராட்சியாக தரம் உயர்கிறது
ADDED : ஜன 01, 2024 09:10 PM
சூலுார்:கணியூர் ஊராட்சியுடன் கரவழி மாதப்பூர் ஊராட்சி இணைக்கப்பட்டு, பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில், உள்ள ஊராட்சிகளில், மக்கள் தொகை நாளுக்கு நாள், அதிகரித்து வருகிறது. கடந்த, 2011 ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கின் படியே ஊராட்சிகளுக்கு, நிதி ஒதுக்கீடுகள் மற்றும் வளர்ச்சி பணிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் திட்டமிடப்படுகின்றன. தற்போது, பல ஊராட்சிகளில், பல மடங்கு மக்கள் தொகை உயர்ந்திருக்கிறது. இதனால், ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. வரும் டிச., மாதம் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைவதால், அதன்பிறகு இப்பணி வேகம் எடுக்கும் என கூறப்படுகிறது.
பேரூராட்சிகளின் இயக்குனரகத்தின் அறிவுறுத்தல் படி, கோவை மாவட்ட நிர்வாகம் பட்டியலை தயாரித்து அனுப்பி உள்ளது. அதில், சூலுார் ஒன்றியத்தில் கரவளி மாதப்பூர், சின்னியம்பாளையம், நீலம்பூர், பட்டணம், முத்துக்கவுண்டன் புதுார், அரசூர், கணியூர் ஆகிய ஊராட்சிகளும் இடம்பெற்றுள்ளன.சூலுார் ஒன்றியத்தில் பெரும்பாலான ஊராட்சிகளில் மக்கள் தொகை அதிகம் இருப்பதால் பேரூராட்சியாக தரம் உயர்த்த வாய்ப்பு உள்ளது.
கணியூர் ஊராட்சியுடன் கரவழி மாதப்பூரை இணைத்து பேரூராட்சியாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல், சின்னியம்பாளையம் ஊராட்சியை கோவை மாநகராட்சியுடன் இணைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

