/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காரமடை பைபாஸ் சாலை 2025 மார்ச்சுக்குள் பணி முடியும் வேலை முடிந்தால் நெரிசல் தீரும்
/
காரமடை பைபாஸ் சாலை 2025 மார்ச்சுக்குள் பணி முடியும் வேலை முடிந்தால் நெரிசல் தீரும்
காரமடை பைபாஸ் சாலை 2025 மார்ச்சுக்குள் பணி முடியும் வேலை முடிந்தால் நெரிசல் தீரும்
காரமடை பைபாஸ் சாலை 2025 மார்ச்சுக்குள் பணி முடியும் வேலை முடிந்தால் நெரிசல் தீரும்
ADDED : ஜன 29, 2024 11:13 PM

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையத்தில் இருந்து தோலம்பாளையம், வெள்ளியங்காடு, கோப்பனாரி, பில்லுார் அணை ஆகிய ஊர்களுக்கு, காரமடை நகர் மற்றும் ரயில்வே கேட் வழியாக செல்ல வேண்டும்.
இந்த வழியாக அதிக அளவில் வாகன போக்குவரத்து இருப்பதால், காரமடையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை திட்டமிடுதல் சார்பாக, 28 கோடி ரூபாய் செலவில் பைபாஸ் சாலை மற்றும் மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
மேம்பாலம், பைபாஸ் சாலை ஒன்றரை ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே இருந்து, ரயில் பாதையை கடந்து, தோலம்பாளையம் சாலையில் சென்றடையும் வகையில், பைபாஸ் சாலை மற்றும் ரயில்வே மேம்பாலம் கட்டப்படவுள்ளது.
ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படும், இந்த பைபாஸ் சாலையால், காரமடை நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு, ஓரளவு தீர்வு கிடைக்கும்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, தோலம்பாளையம், வெள்ளியங்காடு செல்லும் வாகனங்கள் அனைத்தும், இந்த பைபாஸ் மற்றும் ரயில்வே மேம்பாலம் வழியாக, தோலம்பாளையம் சாலையில் சென்றடையலாம்.
இந்த பைபாஸ் சாலையில், 17 இடங்களில் தூண்கள் அமைத்து, அதன் மீது, 12 மீட்டர் அகலத்திற்கு ரோடு போடப்பட உள்ளது. இதுவரை 30 சதவீதம் பணிகள் நடைபெற்றுள்ளன. 2025 மார்ச் மாதத்திற்குள்,
இந்த சாலை அமைக்கும் பணிகள் முழுமையாக செய்து முடிக்கப்படும். ரயில்வே நிர்வாகத்தினர், தனியாக ரயில் பாதையின் குறுக்கே, 7.5 மீட்டர் உயரத்துக்கு மேம்பாலம் கட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.