/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காரமடையில் சர்வர் கோளாறு சரியானது; ஆன்லைனில் கட்டட அனுமதி பெறலாம்
/
காரமடையில் சர்வர் கோளாறு சரியானது; ஆன்லைனில் கட்டட அனுமதி பெறலாம்
காரமடையில் சர்வர் கோளாறு சரியானது; ஆன்லைனில் கட்டட அனுமதி பெறலாம்
காரமடையில் சர்வர் கோளாறு சரியானது; ஆன்லைனில் கட்டட அனுமதி பெறலாம்
ADDED : ஜன 08, 2024 10:45 PM
மேட்டுப்பாளையம்:காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் ஆன்லைன் வாயிலாக கட்டட வரைபட அனுமதி வழங்கும் நடைமுறையில், சர்வர் கோளாறு காரணமாக சிக்கல் ஏற்பட்டது. தற்போது சர்வர் பிரச்னை சீர் செய்யப்பட்டு ஆன்லைன் வாயிலாக அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளில் இருப்பது போல, ஊராட்சிகளில் கட்டட வரைபட அனுமதி ஆன்லைன் வாயிலாக வழங்கும் நடைமுறை கடந்த சில மாதங்களுக்கு முன் அமல்படுத்தப்பட்டது.
காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெள்ளாதி, பெள்ளேபாளையம், சிக்கதாசம்பாளையம், சிக்காரம்பாளையம், சின்னகள்ளிப்பட்டி, இலுப்பநத்தம், இரும்பொறை, ஜடையம்பாளையம், காளம்பாளையம், மருதுார், கெமாரம்பாளையம், மூடுதுறை, நெல்லித்துறை, ஓடந்துறை, தேக்கம்பட்டி, தோலம்பாளையம், வெள்ளியங்காடு என 17 ஊராட்சிகளிலும் இது அமல்படுத்தப்பட்டது.
புதிதாக கட்டடம் கட்டும் முன், ஊராட்சி நிர்வாகத்திடம் கட்டட வரைபட அனுமதி பெறுவது அவசியம்.
இதுவரை நேரில் ஆவணங்களுடன் விண்ணப்பித்து காசோலை வாயிலாக கட்டணம் செலுத்தி வரைபட அனுமதி பெறப்பட்டது. பொது மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் ஊராட்சிகளிலும் ஆன்லைன் வாயிலாக கட்டட வரைபட அனுமதி அமலுக்கு வந்ததை அடுத்து, பொதுமக்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க தொடங்கினர்.
இதனிடையே சுமார் 1 மாதத்திற்கும் மேலாக காரமடை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில், சர்வர் கோளாறு காரணமாக இந்த நடைமுறைக்கு சிக்கல் ஏற்பட்டது.
இதனால் புதிதாக கட்டடம் கட்டுவோர், கட்டட வரைபட அனுமதி இல்லாமல் மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு போன்றவை பெற முடியாமல் தவித்து வந்தனர். தற்போது ஆன்லைன் சர்வர் சரிசெய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.