/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கராத்தே தகுதி போட்டி: சிறந்த வீரர்கள் தேர்வு
/
கராத்தே தகுதி போட்டி: சிறந்த வீரர்கள் தேர்வு
ADDED : நவ 24, 2024 11:08 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, வெங்கட்ரமணன் வீதி, அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி மாணவ, மணவியருக்கு, கடந்த மூன்று மாதங்களாக, கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், 3, 4 மற்றும் 5ம் வகுப்பு, மாணவர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியாளர்கள் பிரசாத், பட்டுகுமார் ஆகியோர், 12 மாணவர்களுக்கு முறையாக கராத்தே பயிற்சி அளித்தனர்.
தொடர்ந்து, தகுதித்தேர்வு அடிப்படையில், 5ம் வகுப்பு மாணவர்கள் ரோகித், அருண், சகாயதிவ்யா, 4ம் வகுப்பு மாணவர் அபிஜித் ஆகியோர் சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு சான்று மற்றும் மஞ்சள் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் அனிதாமேரி தலைமை வகித்தார். நகராட்சி கவுன்சிலர் சாந்தலலிங்கம், மாணவர்களுக்கு சான்று மற்றும் மஞ்சள் பெல்ட் வழங்கினார். முடிவில், உதவி ஆசிரியர் யூனைசிபியூலாசுகந்தி நன்றி கூறினார்.