/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கார்கில் வெற்றி விழா கொண்டாட்டம்
/
கார்கில் வெற்றி விழா கொண்டாட்டம்
ADDED : ஜூலை 29, 2024 03:26 AM

கோவை;பிச்சனுார், ஜெ.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், 25ம் ஆண்டு கார்கில் வெற்றி தின விழா, விமர்சையாக கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினராக, கார்கில் போரில் குஜராத் பிரிவில் பொறியாளராக பணியாற்றிய இந்திய விமானப்படை ஜூனியர் வாரன்ட் ஆபீஸர் ரவீந்திரன் மற்றும் இந்திய விமானப்படையின் சர்ஜன்டாக 1993 முதல் 2013 வரை சேவை புரிந்த, கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.
ராணுவத்தில் பணியாற்றிய தங்கள்அனுபவம் மற்றும் கார்கில் போர் நிகழ்வுகள், உள்ளிட்ட பல்வேறு நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கார்கில் போர் குறித்த காணொளி காட்சி ஒளிபரப்பப்பட்டது. கல்லுாரி முதல்வர் மனோகரன் மற்றும் மாணவர்கள், பேராசிரியர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.