/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கரிய காளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா
/
கரிய காளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா
ADDED : மே 24, 2025 12:42 AM
சூலுார் : கிட்டாம்பாளையம் ஸ்ரீ கரிய காளியம்மன் கோவிலில் பூச்சாட்டு திருவிழா நடந்தது.
கிட்டாம் பாளையத்தில் உள்ள ஸ்ரீ கரிய காளியம்மன் கோவில் பழமையானது. இங்கு, கடந்த, 13 ம்தேதி விநாயகர் பூஜை, கொடியேற்றத்துடன் பூச்சாட்டு திருவிழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.
20ம்தேதி கரகம் ஜோடித்து அழைத்து வருதல், படைக்களம் எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடந்தன. 21ம் தேதி காலை அம்மை அழைத்தல், குதிரை வாகனம் மற்றும் மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.
பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். மாலை முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் மஞ்சள் நீராட்டுடன் அம்மன் திருவீதி உலா நடந்தது. இரவு கொடி இறக்கப்பட்டு மறுபூஜை நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.