/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கர்நாடகா மாநில மதுபாட்டில்கள் பறிமுதல்
/
கர்நாடகா மாநில மதுபாட்டில்கள் பறிமுதல்
ADDED : ஜன 30, 2025 07:41 AM

கோவை; வடவள்ளி, வீரகேரளம் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீரகேரளம் பகுதியை சேர்ந்த குமரேசன், 57 என்பவர் குட்கா மற்றும் கர்நாடகா மது பாட்டில்கள் விற்பனை கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது, கர்நாடகாவில் இருந்து லாரியில் மது பாட்டில்கள் வருவதாக தெரிவித்துள்ளார்.
தகவலின் அடிப்படையில், போலீசார் நீலம்பூர் பகுதியில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்றில், மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, லாரியில் இருந்த, 517 கர்நாடகா மது பாட்டில்களை, போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தி வந்த மதுரையை சேர்ந்த ரங்கநாதன், 50, திருப்பூரை சேர்ந்த சதீஷ்பாபு, 43 மற்றும் பீகாரை சேர்ந்த விஷ்வநாத் குமார், 20 ஆகியோரை கைது செய்தனர்.