/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென் மண்டல வீல்சேர் கூடைப்பந்து போட்டியில் கர்நாடகா அணி கலக்கல்
/
தென் மண்டல வீல்சேர் கூடைப்பந்து போட்டியில் கர்நாடகா அணி கலக்கல்
தென் மண்டல வீல்சேர் கூடைப்பந்து போட்டியில் கர்நாடகா அணி கலக்கல்
தென் மண்டல வீல்சேர் கூடைப்பந்து போட்டியில் கர்நாடகா அணி கலக்கல்
ADDED : ஜன 04, 2024 12:17 AM

கோவை : கோவையில் நடந்த தென்மண்டல அளவிலான வீல் சேர் கூடைப்பந்து போட்டியின் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவுகளிலும், முதல் இடம் பிடித்து கர்நாடகா மாநில அணி கலக்கியது.
சிற்றுளி பவுண்டேஷன், பாரத் ஸ்போர்ட்ஸ் கிளப், மற்றும் கங்கா முதுகுதண்டுவட மறுவாழ்வு மையம் சார்பில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது பிரிவினர்களை ஒருங்கிணைத்து கூடைப்பந்து போட்டி, கவுண்டம்பாளையம் கங்கா முதுகு தண்டுவட மறுவாழ்வு மைய மைதானத்தில் நடந்தது.
இதில் பொது பிரிவினருக்கு, 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான மூன்று பேர் கூடைப்பந்து போட்டியும், மாற்றுத்திறனாளிகளுக்கு தென் மண்டல அளவில் வீல் சேர் போட்டியும் நடத்தப்பட்டது.
பொது பிரிவில் 32 மாணவர்கள் அணியும், 16 மாணவியர் அணியும் பங்கேற்றன. வீல் சேர் கூடைப்பந்து பிரிவில், கோவை, புதுச்சேரி, கர்நாடகா, வேலுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 14 ஆண்கள் அணி மற்றும் 8 பெண்கள் அணிகள் பங்கேற்றன.
வீல் சேர் கூடைப்பந்து ஆண்கள் பிரிவில், கர்நாடகா 'ஏ' அணி 7 - 6 என்ற புள்ளிக்கணக்கில் கோவை 'ஏ' அணியையும், பெண்கள் பிரிவில், கர்நாடகா 'ஏ' அணி 4 - 2 என்ற புள்ளிக்கணக்கில் கர்நாடகா 'பி' அணியையும் வீழ்த்தின. பொது மாணவர்கள் பிரிவில், ராஜலட்சுமி மில்ஸ் அணி 19 - 17 என்ற புள்ளிக்கணக்கில் மான்ஸ்டர் அணியையும், மாணவியர் பிரிவில், பாரதி பள்ளி 'ஏ' அணி 9 - 8 என்ற புள்ளிக்கணக்கில் பாரதி பள்ளி 'பி' அணியையும் வீழ்த்தின.