/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னிந்திய அளவிலான கபடி : கற்பகம் பல்கலைக்கு முதலிடம்
/
தென்னிந்திய அளவிலான கபடி : கற்பகம் பல்கலைக்கு முதலிடம்
தென்னிந்திய அளவிலான கபடி : கற்பகம் பல்கலைக்கு முதலிடம்
தென்னிந்திய அளவிலான கபடி : கற்பகம் பல்கலைக்கு முதலிடம்
ADDED : மார் 26, 2025 10:29 PM
கோவை:
தென்னிந்திய அளவிலான கபடி போட்டியில், கற்பகம் பல்கலை அணி, வேல்ஸ் பல்கலை அணியை வென்று முதலிடம் பிடித்தது.
சேலம் மாவட்டம் , ஓமலுாரில் தென் மாநில அளவிலான கபடி போட்டி, மூன்று நாட்கள் நடந்தது. இதில், 60 அணிகள் கலந்து கொண்டன.
பல்வேறு சுற்றுகளை அடுத்து, நடந்த முதல் காலிறுதிப் போட்டியில், கற்பகம் பல்கலை அணியும், சேலம் சாமி ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியும் மோதின. இதில், 35-21 என்ற புள்ளி கணக்கில், கற்பகம் பல்கலை வெற்றி பெற்றது.
அரையிறுதிப் போட்டியில், நாகை ஸ்போர்ட்ஸ் அணியை எதிர்கொண்ட கற்பகம் பல்கலை, 43-20 என்ற புள்ளி கணக்கில், வெற்றி பெற்றது.
இறுதிப்போட்டியில் கற்பகம் பல்கலை அணியும், வேல்ஸ் பல்கலை அணியும் மோதின. பரபரப்பான ஆட்டத்தில், 36-33 என்ற புள்ளி கணக்கில், கற்பகம் பல்கலை வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற அணியினரை, உடற்கல்வி இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் பாராட்டினர்.