/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில வாலிபால் போட்டியில் கற்பகம் பல்கலைக்கு 'டிராபி'
/
மாநில வாலிபால் போட்டியில் கற்பகம் பல்கலைக்கு 'டிராபி'
மாநில வாலிபால் போட்டியில் கற்பகம் பல்கலைக்கு 'டிராபி'
மாநில வாலிபால் போட்டியில் கற்பகம் பல்கலைக்கு 'டிராபி'
ADDED : மார் 31, 2025 10:24 PM

கோவை; மாநில அளவிலான வாலிபால் போட்டியில், கற்பகம் பல்கலை அணி 'இந்துஸ்தான் டிராபி'யை வென்றது.
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியின் உடற்கல்வித் துறை சார்பில், மாநில அளவிலான ஆண்களுக்கான வாலிபால் போட்டி நடந்தது. 'இந்துஸ்தான் டிராபி-2025' போட்டியில், தமிழகத்தில் தலைசிறந்த, 18 அணிகள் விளையாடின. பாரதியார் பல்கலை உடற்கல்வித்துறை பேராசிரியர் அண்ணாதுரை, போட்டிகளை துவக்கிவைத்தார்.
பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த இறுதிப்போட்டியில், கற்பகம் பல்கலை அணி முதலிடத்தையும், டாக்டர் என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரி அணி இரண்டாம் இடத்தையும், வேலுார் வி.ஐ.டி., அணி மூன்றாம் இடத்தையும், பாரதியார் பல்கலை நான்காம் இடத்தையும் பிடித்தன.
போட்டியின் சிறந்த வீரர்களாக, கற்பகம் பல்கலை அணியை சேர்ந்த சரண்குமார், என்.ஜி.பி., அணியை சேர்ந்த ஜெகதீஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றிபெற்ற அணியினருக்கும், சிறந்த வீரர்களுக்கும், இந்துஸ்தான் கல்லுாரி செயலாளர் சரஸ்வதி, உடற்கல்வித்துறை இயக்குனர் கருணாநிதி உள்ளிட்டோர், பரிசுகள் வழங்கினர்.