/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கார்த்திகை தீப உற்சவ விழா; சாரதாலயத்தில் கோலாகலம்
/
கார்த்திகை தீப உற்சவ விழா; சாரதாலயத்தில் கோலாகலம்
ADDED : நவ 24, 2024 11:52 PM

கோவை; ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் நேற்று மாலை நடந்த கார்த்திகை தீப உற்சவ விழாவில், 12 ஆயிரம் கார்த்திகை விளக்குகள் ஜொலித்தன.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம், சாரதாம்பாள் கோவிலில் தீப உற்சவ விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நேற்று மாலை விழா நடந்தது.
சாரதாம்பாளுக்கு சிறப்பு குங்குமார்ச்சனை நடந்தது. உலக நலனை கருதி அம்பாளிடம் சங்கல்பம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
தொடர்ந்து, அம்பாள் அருகே உள்ள விளக்கிலிருந்து, ஒரு மண்விளக்கில் தீபம் ஏற்றப்பட்டு கோவில் மகாமண்டபத்தில் இன்னொரு விளக்கு ஏற்றப்பட்டது. அடுத்தடுத்து, பக்தர்கள் கோவில் அர்த்த மண்டபம், மஹாமண்டபம், சுற்றுமண்டபங்களில் விளக்கேற்றினர். சாரதாம்பாள், சிவலிங்கம், தாமரை, துர்காதேவி போன்ற வடிவங்களில் விளக்குகள் வடிவமைக்கப்பட்டு ஏற்றப்பட்டன.
கோவில் பிரகாரம், சுற்றுப்பிரகாரம், அர்த்தமண்டபம், மஹாமண்டபம், கோவில் வெளிப்புறம் என்று கோவில் முழுக்க விளக்கொளியில் ஜொலித்தது.
பரதநாட்டிய கலாநிதி மிருதுளாராய் குழுவினர் விளக்குகளை பல்வேறு வடிவங்களாக வடிவமைத்தனர்.
12 ஆயிரம் விளக்குகள் ஏற்றி, பக்தர்கள்பக்திபரவசத்துடன் வழிபாடு செய்தனர்.