UPDATED : நவ 19, 2026 07:09 PM
ADDED : நவ 19, 2026 07:05 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பகுதியில், கார்த்திகை தீப விளக்கு விற்பனை துவங்கியுள்ளது.
கார்த்திகை தீபத்திருவிழா ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். கார்த்திகை மாத பவுர்ணமியில் கிருத்திகை நட்சத்திர நாளான, வரும், 24ம் தேதி தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்தப் பண்டிகை மூன்று நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வீடுகள், கோவில் மற்றும் தெருக்களில் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி, இருளை விரட்டி நன்மையை வரவேற்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.
தற்போது, கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்டு, சென்றாம்பாளையம் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில், கார்த்திகை தீபத் திருநாளுக்காக அகல்விளக்குகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சிறியது, பெரியது, ஐந்து முகம் கொண்டது என, 2 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விளக்குகள் விற்பனை செய்யப்படுகிறது.
