UPDATED : நவ 19, 2026 07:05 PM
ADDED : நவ 19, 2026 07:05 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், வாக்காளர் விழிப்புணர்வு குழு சார்பில் மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில், வாக்காளர் விழிப்புணர்வு குழு சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள், என்.ஜி.எம்., கல்லுாரியில் நடந்தது. அதில், வினாடி -– வினா மற்றும் கட்டுரை எழுதுதல் போட்டிகள் நடத்தப்பட்டன.
தாசில்தார் முருகேசன், போட்டிகளை துவக்கி வைத்தார். தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கருப்பையா மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
அதில், 52 பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். கட்டுரை, வினாடி – வினா போட்டியில் தேர்வு செய்யப்பட்ட தலா, 10 பேருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் விரைவில் வழங்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
