/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுப்ரமணிய சுவாமிக்கு கார்த்திகை சஷ்டி பூஜை
/
சுப்ரமணிய சுவாமிக்கு கார்த்திகை சஷ்டி பூஜை
ADDED : டிச 06, 2024 11:05 PM

வால்பாறை; வால்பாறை, சுப்ரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாதத்தையொட்டி நடந்த சஷ்டி பூஜையில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கார்த்திகை மாத சஷ்டி பூஜையான நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜைநடந்தது. அதன்பின், காலை, 7:00 மணிக்கு பால், சந்தனம், திருநீறு, இளநீர், பன்னீர்உள்ளிட்ட, 16 வகையான பொருட்களைக்கொண்டு அபிேஷக பூஜையும், தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. பக்தர்கள் பக்தி பாடல்களை பாடினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதே போல், முடீஸ் சுப்ரமணிய சுவாமி கோவில், வாட்டர்பால்ஸ் பாலமுருகன்கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகர் கோவில்களில், கார்த்திகை மாத சஷ்டி பூஜையை முன்னிட்டு, மூலவருக்கு பல்வேறு அபிேஷக பூஜைகளும், சிறப்பு அலங்காரமும் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.