/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கராத்தே, சிலம்பம் போட்டியில் கார்த்திக் அகாடமி சாம்பியன்
/
கராத்தே, சிலம்பம் போட்டியில் கார்த்திக் அகாடமி சாம்பியன்
கராத்தே, சிலம்பம் போட்டியில் கார்த்திக் அகாடமி சாம்பியன்
கராத்தே, சிலம்பம் போட்டியில் கார்த்திக் அகாடமி சாம்பியன்
ADDED : மார் 05, 2024 12:56 AM

கோவை;மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில், கார்த்திக் அகாடமி ஆப் மார்ஷியல் ஆர்ட்ஸ் அணி, ஒட்டுமாத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது.
தி பைட்டர்ஸ் அகாடமி, ஹயாஷிகா ஹா சார்பில் பள்ளி மாணவ - மாணவியருக்கு மாநில அளவிலான 12வது கராத்தே, சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி, ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக்., பள்ளியில் நடந்தது.
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியை, கிருஷ்ணா மெட்ரிக்., பள்ளி தாளாளர் பானுமதி துவக்கி வைத்தார்.
கராத்தே போட்டியில், சிறப்பாக விளையாடிய கோவை கார்த்திக் அகாடமி ஆப் மார்ஷியல் ஆர்ட்ஸ் அணி, 105 பதக்கங்கள் வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக்., பள்ளி அணி இரண்டாமிடத்தையும், எகுவிடாஸ் பள்ளி அணி மூன்றாமிடத்தையும் பிடித்தன.
சிலம்பம் போட்டியில், ருத்ரன் சிலம்ப பள்ளி முதலிடத்தையும், பாரதியார் சிலம்ப பள்ளி இரண்டாமிடத்தையும், எஸ்.ஆர்.வீ., பள்ளி மூன்றாமிடத்தையும் பிடித்தன.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பரிசாக வழங்கப்பட்டன.
போட்டிக்கான ஏற்பாடுகளை, பைட்டர்ஸ் அகாடமி பயிற்சியாளர் ரமேஷ் குமார் செய்திருந்தார்.

