/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முருகப்பெருமானுக்கு கார்த்திகை சிறப்பு பூஜை
/
முருகப்பெருமானுக்கு கார்த்திகை சிறப்பு பூஜை
ADDED : பிப் 17, 2024 12:08 AM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், கார்த்திகை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி அருகே, திப்பம்பட்டி சிவசக்தி கோவிலில், மாசி மாத கார்த்திகையை முன்னிட்டு, பாலமுருகனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, முருகப்பெருமான், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சேரன் நகர் தொழிலாளர் காலனி செல்வவிநாயகர் கோவிலில், பாலமுருகனுக்கு கார்த்திகையை முன்னிட்டு, சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முருகப்பெருமான், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், முருகப்பெருமானுக்கு கார்த்திகை சிறப்பு பூஜை நடந்தது.
* உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், மாசி மாத கார்த்திகையை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமதே சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பால், பன்னீர், சந்தனம் உட்பட பல்வேறு திரவியங்களில் அபிேஷகமும், சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. மாலையில் சுவாமிகளின் வெள்ளித்தேர் திருவீதி உலா வந்து அருள்பாலித்தனர். இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.