/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனைத்து வசதிகளுடன் உருவாகிறது கார்த்திபுரம்
/
அனைத்து வசதிகளுடன் உருவாகிறது கார்த்திபுரம்
ADDED : ஆக 04, 2025 11:52 PM

கோவை: நீலாம்பூர் அருகே வெள்ளானைப்பட்டியில் உருவாகி வரும் கார்த்திபுரம் பகுதியில், ஆயிரம் மரக்கன்று நடும் விழா, கோலாகலமாக நடந்தது.
கோவை நீலாம்பூர் அருகில், 200 ஏக்கரில் ஆயிரம் வீட்டுமனைகளுடன், அனைத்து வசதிகளும் கொண்ட புதிய நகராக, கார்த்திபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. உண்ணாமலை புரமோட்டர்ஸ் சார்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த நகரில், பல்வேறு வசதிகள் இடம் பெறுகின்றன. இங்கு, ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
விழாவில், சங்கர் அசோசியேட்ஸ் ரமணிசங்கர் பேசுகையில், ''கார்த்திபுரத்தில் ஒன்பது ஏக்கரில் பூங்கா அமைக்கப்படுகிறது. அனைத்து கேபிள்களும் நிலத்தடியில் பதிக்கப்படும். குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, பள்ளி, ஷாப்பிங் மால், தியேட்டர், உடற்பயிற்சி, நடைபாதை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இது, கோவையின் 'சாட்டிலைட்' நகரமாக இருக்கும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், உண்ணாமலை புரமோட்டர்ஸ் நிறுவனர் கார்த்திகேயன், இயக்குனர் நவீன், லயன்ஸ் கிளப் கவர்னர் மோகன் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.